Tazhal Media – தழல் மீடியா

/ May 19, 2026
Latest News
tms

Pulau Pinang PBT-கள் உடலில் அணியும் kamera மூலம் கண்காணிப்பு

Picture : Awani

GEORGE TOWN, 19 மே 2026: Pulau Pinang மாநிலத்தில் பொதுமக்கள் இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க, உள்ளூர் நிர்வாக அமைப்புகள் (PBT) உடலில் அணியும் கேமராவை பயன்படுத்தத் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Majlis Bandaraya Pulau Pinang (MBPP) மற்றும் Majlis Bandaraya Seberang Perai (MBSP) ஆகியவை, Perintah Khidmat Masyarakat (PKM) அமல்படுத்தும்போது இந்த கேமரா, வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக பயன்படுத்தவுள்ளன. இந்த நடைமுறை வரும் 1 ஜூலை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pulau Pinang மாநில உள்ளூராட்சி மற்றும் நகர திட்டமிடல் குழுத் தலைவர் H’ng Mooi Lye கூறுகையில், இந்த நடவடிக்கை சட்ட அமலாக்கத்தை மேலும் வெளிப்படையாகவும் ஒழுங்காகவும் மாற்றும் என்றார். தற்போது MBPP-யிடம் 170 body camera-களும், MBSP-யிடம் 17 camera-களும் உள்ளதாகவும், மேலும் பல கேமராக்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 1,822 CCTV கேமராக்களும் கண்காணிப்பிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. பொதுமக்கள் இடங்களில் குப்பை வீசுவோர், அபராதம் செலுத்துவதுடன் சமூக சேவையிலும் ஈடுபட வேண்டியிருக்கும்.

சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது 12 மணி நேர சமூக சேவை தண்டனை வழங்கப்படலாம். இந்த நடவடிக்கை தண்டனைக்காக மட்டும் அல்லாமல், மக்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top