Tazhal Media – தழல் மீடியா

/ Jun 13, 2026
Latest News
tms

Sabah Southern MADANI Link: கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கிய திட்டம் – Datuk Seri Anwar Ibrahim

Picture : Awani

Kota Kinabalu, 13 Jun – சபா Southern MADANI Link (SSML) திட்டம் மாநிலத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, குறிப்பாக pedalaman பகுதிகளுக்கு வளர்ச்சியை கொண்டு செல்லும் முக்கிய முயற்சி என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய அவர், வளர்ச்சி என்பது நகரங்களுக்கு மட்டும் அல்லாமல் pedalaman மற்றும் luar bandar பகுதிகளுக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய கொள்கை என வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், சபாவில் நீண்ட காலமாக இருந்த மின்சார விநியோக சிக்கல்களை தீர்க்கவும், grid elektrik அமைப்பை வலுப்படுத்தவும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் Sabah மாநிலத்தின் kawasan Timur மற்றும் Barat பகுதிகளுக்கிடையிலான மின்சார விநியோக சமநிலை மேம்படும் என்றும் அவர் கூறினார். RM198 juta செலவில் செயல்படுத்தப்படும் இந்த SSML திட்டம் 2028 ஆண்டு September மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 17% வேலைகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டம் எதிர்காலத்தில் ASEAN Power Grid இணைப்பிற்கும் அடித்தளமாக இருக்கும் எனவும், பிராந்திய ஆற்றல் இணைப்பை வலுப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்த முயற்சி Sabah மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தி, முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலை உருவாக்கும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிராமப்புற மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த அடிப்படை வசதிகள் மேம்படும் என்பதால் இந்த திட்டம் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் Sabah மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சி திட்டத்துடன் இணைக்கப்பட்டு, எதிர்கால தலைமுறைக்கு நிலையான உள்கட்டமைப்பு வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

Scroll to Top