
Picture : Awani
Kuala Lumpur, 11 ஜூன் 2026: Piala Dunia 2026 தொடருக்கு முன்பாக Haiti தேசிய கால்பந்து அணி தனது அதிகாரப்பூர்வ ஜெர்சி வடிவமைப்பை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக கால்பந்து அமைப்பு FIFA, அந்த ஜெர்சி வடிவமைப்பில் உள்ள சில அம்சங்களை “அரசியல் தொடர்புடையதாக” கருதிக் கண்டனம் தெரிவித்ததையடுத்து இந்த மாற்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Haiti அணிக்காக தயாரிக்கப்பட்ட ஜெர்சியில், அந்த நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கலை வடிவமைப்பு இடம்பெற்றிருந்தது. குறிப்பாக 1803ஆம் ஆண்டு நடைபெற்ற Haiti விடுதலைப் போராட்டத்தை குறிக்கும் காட்சி மற்றும் புரட்சியை நினைவூட்டும் சின்னங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன.
ஆனால் FIFA விதிகளின்படி, விளையாட்டு உடைகளில் அரசியல், மதம் அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளை பிரதிபலிக்கும் எந்தவொரு சின்னங்களும் இடம்பெறக் கூடாது என்பதால் இந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜெர்சி தயாரிப்பு நிறுவனம் Saeta, FIFA கோரிக்கைக்கு ஏற்ப வடிவமைப்பில் மாற்றங்களை செய்து புதிய பதிப்பை தயாரித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஜெர்சி விரைவில் அணியினருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Haiti அணி சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி Piala Dunia தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெர்சி மாற்றம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. FIFA விதிகள் மற்றும் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்புகளுக்கு இடையிலான சமநிலை குறித்து இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



