
Picture : Awani
Kota Kinabalu, 22 ஜூன் 2026: Diesel விலை குறைப்பு மக்களுக்கு நேரடி நன்மை அளிப்பதாக ஜபாத்தான் பெரடானா மந்திரி (Sabah மற்றும் Sarawak விவகாரம்) அமைச்சர் Datuk Mustapha Sakmud தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அரசாங்கம் மேற்கொண்டு வரும் இலக்குப்படுத்தப்பட்ட (penyasaran) சலுகை கொள்கையின் மூலம் diesel விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இது மக்களின் வாழ்க்கைச் செலவுகளை குறைக்க உதவுகிறது என அவர் தெரிவித்தார்.
MyKad முறையின் மூலம் சலுகை வழங்கப்படுவது, தகுதியான மக்களுக்கு மட்டுமே உதவி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்க நிதி வீணாகாமல் பாதுகாக்கப்படுவதுடன், தவறான பயன்பாடுகள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளும் குறைக்கப்படும் என அவர் கூறினார். இந்த கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை மேலும் திறமையாக நிர்வகிக்க உதவுகிறது என்றும் Mustapha தெரிவித்தார். குறிப்பாக, நீண்ட காலத்தில் அரசாங்க நிதி நிலைத்தன்மை பெறும் எனவும் அவர் கூறினார்.
Diesel விலை குறைப்பு போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் துறைக்கு நேரடி நன்மை அளிக்கும் என்றும், இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைத்திருக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய பொருளாதார நிலைமை மற்றும் எரிசக்தி சந்தை இன்னும் அசாதாரணமாக உள்ள நிலையில், மலேசியா தனது எரிசக்தி கொள்கையை சரியான முறையில் நிர்வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, diesel சலுகை விலை சுமார் RM2.10 லிட்டருக்கு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதோடு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



