Tazhal Media – தழல் மீடியா

/ Jun 18, 2026
Latest News
tms

PM Anwar Turkmenistan சென்றடைந்தார் – இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் ஆரம்பம்

Picture : Awani

Ashgabat, Turkmenistan, 18 ஜூன் 2026: பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, Turkmenistan நாட்டிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வதற்காக Ashgabat நகரை சென்றடைந்தார்.

முன்னதாக Rusia-வில் நடைபெற்ற ASEAN–Russia நினைவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், Anwar இந்த பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ பயணம் Turkmenistan ஜனாதிபதி Serdar Berdimuhamedov-ன் அழைப்பின் பேரில் நடைபெறுகிறது.

இந்த பயணத்தின் போது Malaysia மற்றும் Turkmenistan இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Anwar உடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Datuk Seri Johari Abdul Ghani, பொருளாதார அமைச்சர் Datuk Seri Akmal Nasrullah Mohd Nasir மற்றும் தொடர்புடைய அமைச்சக அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதி குழுவும் சென்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை அதிகரிப்பதுடன், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதும் இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. Malaysia மற்றும் Turkmenistan இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top