Tazhal Media – தழல் மீடியா

/ Jun 18, 2026
Latest News
tms

மாற்றங்கள் வெறும் முயற்சி அல்ல, LA28 இலக்கு நோக்கி திட்டமிடப்பட்டவை” – Rexy Mainaky

Picture : Awani

Kuala Lumpur, 16 ஜூன் 2026: மலேசிய தேசிய ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் அணியில் செய்யப்பட்ட புதிய ஜோடி மாற்றங்கள் வெறும் “cuba nasib” அல்ல என்றும், 2028 Los Angeles ஒலிம்பிக்கில் தகுதி பெறும் இலக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் தேசிய இரட்டையர் பயிற்சி இயக்குநர் Rexy Mainaky தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், புதிய கூட்டணிகள் உருவாக்கப்படுவது நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் வீரர்களின் செயல்திறன், ஒருங்கிணைப்பு (chemistry) மற்றும் போட்டி சூழலில் அவர்களின் தாக்கம் ஆகியவை முக்கிய அடிப்படையாக கருதப்படுகின்றன.

Rexy மேலும் தெரிவித்ததாவது, சில ஜோடிகள் உடனடியாக வெற்றி பெறாவிட்டாலும், அவர்கள் திறன் மற்றும் முன்னேற்றம் காட்டினால் அந்த கூட்டணிகளை தொடர்ச்சியாக பரிசீலிக்கப்படும் என கூறினார். இலக்கு என்பது குறுகிய கால வெற்றி அல்ல, மாறாக ஒலிம்பிக் மேடையில் மலேசியாவுக்கு வரலாற்று சாதனை ஏற்படுத்துவதே ஆகும்.

அவர், உலக தரத்தில் உள்ள அணிகள் தொடர்ந்து தங்கள் இரட்டையர் கூட்டணிகளை மாற்றி பரிசோதித்து சிறந்த இணைப்பை கண்டறிவதை எடுத்துக்காட்டாக கூறினார். அதுபோலவே மலேசியாவும் புதிய தலைமுறை வீரர்களுக்கு அனுபவம் வழங்கி, வலுவான கூட்டணிகளை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும் வீரர்கள் மனப்பாங்கு (mental strength) மற்றும் வெற்றி நோக்குடன் விளையாட வேண்டும் என்றும் Rexy வலியுறுத்தினார். மாற்றங்கள் இருந்தாலும், ஒவ்வொரு வீரரும் அதனை வாய்ப்பாகக் கருதி முன்னேற வேண்டும் என அவர் கூறி னார். இந்த புதிய மாற்றங்கள் மலேசிய பேட்மிண்டன் துறையில் LA28 இலக்கை நோக்கி ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.

Scroll to Top