Tazhal Media – தழல் மீடியா

/ Jul 06, 2026
Latest News
tms

TARC கல்வி Yayasan வரி விலக்கு – நிபந்தனைகள் பூர்த்தி செய்ய வேண்டும்: MOF

Picture : Awani

PUTRAJAYA: TARC கல்வி Yayasan வழங்கப்படும் வரி விலக்கு தானாக வழங்கப்படுவதில்லை என்றும், அது அரசாங்கம் நிர்ணயித்த நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நிதி அமைச்சகம் (MOF) தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்ததற்கிணங்க, 27 நவம்பர் 2025 முதல் தகுதியான கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நல நிதிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை வரி விலக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இது வருமான வரி சட்டம் 1967 இன் பிரிவு 44(6) கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் TARC கல்வி Yayasan தற்போதைய வரி விலக்கு காலம் 2025-இல் முடிவடையும் நிலையில், அதன் நீட்டிப்பு விண்ணப்பத்தில் சில நிபந்தனைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என மதிப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்வாக மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இதனால், அரசாங்கம் இடைக்காலமாக மூன்று ஆண்டுகள் வரி விலக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறலாம் என்றும், அதே நேரத்தில் தேவையான மேம்பாடுகள் நிறைவேற்றப்படலாம் என்றும் MOF தெரிவித்துள்ளது.

அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், TARC கல்வி அறக்கட்டளைக்கு முழுமையான 10 ஆண்டு வரி விலக்கு மீண்டும் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது. அரசாங்கம் எப்போதும் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகக் கொள்கையை பின்பற்றுவதாகவும் MOF வலியுறுத்தியுள்ளது.

Scroll to Top