
Picture : Awani
KUALA LUMPUR: எரிபொருள் மானிய மறுசீரமைப்பு அமலாக்கத்தின் இடைக்காலத்தில் Petrol நிலைய உரிமையாளர்கள் நிதி இழப்பை சந்தித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்கம் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Dewan Rakyat-இல் நடைபெற்ற Waktu Pertanyaan-Pertanyaan Menteri அமர்வில் அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் தகவல்கள் பெறப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசனை நடத்தப்படும் என்றார். Petrol மற்றும் diesel மானிய இலக்குமுறை (penyasaran subsidi) வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எண்ணெய் நிறுவனங்களும் Petrol நிலைய உரிமையாளர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கு அரசாங்கம் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசானிடம் (Datuk Seri Amir Hamzah Azizan) விரிவான தகவல்களை சேகரித்து, எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார். மானிய மாற்றத்தின் போது சில Petrol நிலையங்கள் RM40,000 முதல் RM50,000 வரை இழப்பை சந்தித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் நியாயமான தீர்வை காண முயற்சிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, diesel மானிய மறுசீரமைப்பை Sabah மற்றும் Sarawak மாநிலங்களில் அவசரமாக அமல்படுத்தாததற்கு அங்குள்ள புவியியல் சூழல், அதிக diesel பயன்பாடு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான Petrol நிலையங்கள் போன்ற காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் அன்வார் விளக்கமளித்தார். மேலும், BUDI MADANI Diesel திட்டத்தின் கீழ் பிக்கப் மற்றும் ஜீப் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதலாக 100 லிட்டர் மானிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாதாந்திர மொத்த ஒதுக்கீடு 300 லிட்டராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



