Tazhal Media – தழல் மீடியா

/ Jul 07, 2026
Latest News
tms

FELDA பணியாளர்களுக்கான வீடுகளை பழுதுபார்க்கவும் புதிய வீடுகள் கட்டவும் RM450 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் Anwar

Picture : Awani

KUALA LUMPUR: நாடு முழுவதும் உள்ள FELDA குடியேற்றப் பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான வீடுகளை பழுதுபார்க்கவும், புதிய வீடுகளை கட்டவும் அரசாங்கம் RM450 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

FELDA குடியேற்றக்காரர் தினம் மற்றும் FELDA-வின் 70 ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர், FELDA பணியாளர்களுக்கு வசதியான மற்றும் தரமான வீடுகளை வழங்குவது அவர்களின் நலனை பாதுகாப்பதுடன், குடியேற்ற மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

Datuk Seri Anwar Ibrahim கூறுகையில், இந்த RM450 மில்லியன் ஒதுக்கீடு FELDA நிலப்பகுதிகளில் உள்ள பணியாளர்களின் பழைய வீடுகளை மேம்படுத்தவும், தேவையான இடங்களில் புதிய வீடுகளை கட்டவும் பயன்படுத்தப்படும் என்றார்.

இதற்கிடையில், புதிய தலைமுறை FELDA மக்களின் நலன் மற்றும் வீட்டு தேவைகளை கருத்தில் கொண்டு, Projek Sentuhan Kasih Felda திட்டத்திற்காக கூடுதலாக RM20 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார். இந்த நிதி Kedah-இல் உள்ள Laka Selatan பகுதியில் 86 வீடுகளையும், Negeri Sembilan-இல் உள்ள Palong பகுதியில் 16 வீடுகளையும் உள்ளடக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், FELDA புதிய தலைமுறை வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், Akta Tanah (Kawasan Penempatan Berkelompok) 1960 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் Anwar தெரிவித்தார். இதன் மூலம் ஒரு குடியிருப்பு நிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார். FELDA சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வீட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறினார்.

Scroll to Top