
Picture : Awani
PUTRAJAYA: Myanmar நீடித்து வரும் நெருக்கடிக்கு நிலையான தீர்வை காண, அனைத்து தரப்பினருடனும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன், அந்நாட்டு மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Thailand பிரதமர் Anutin Charnvirakul உடனான இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், Myanmar-ரின் அண்டை நாடாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் இருக்கும் தாய்லாந்து, அந்த நாட்டின் பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காணும் முயற்சியில் முக்கிய பங்காற்றும் திறன் கொண்டுள்ளது என்றார்.
Myanmar விவகாரம் தொடர்பாக Thailand பிரதமர் பகிர்ந்த கருத்துகளை வரவேற்பதாக தெரிவித்த அன்வார், ASEAN நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றும் கூறினார். Myanmar பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வு காண அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதே சிறந்த வழியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ASEAN வெளிவிவகார அமைச்சர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து Myanmar நிலைமையை விவாதிக்க Thailand எடுத்துள்ள முயற்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த முயற்சி, பிராந்திய நாடுகளின் ஒற்றுமையையும், நெருக்கடியை தீர்க்கும் கூட்டு உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், Thailand பிரதமர் Anutin Charnvirakul, எந்தவொரு வன்முறையையும் மலேசியா ஒருபோதும் ஏற்காது என்ற உறுதியான நிலைப்பாட்டை பாராட்டினார். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மலேசியாவின் அர்ப்பணிப்பை Thailand மதிப்பதாகவும் அவர் கூறினார்.
இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமலாக்க அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அடுத்த வாரம் Thailand பாதுகாப்பு அமைச்சர் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளதாகவும் அனுடின் தெரிவித்தார். மேலும், Sungai Golok எல்லைப் பகுதியில் எல்லைத் தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்காக கூட்டு பணிக்குழுவை அமைக்கவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.



