Tazhal Media – தழல் மீடியா

/ Jul 10, 2026
Latest News
tms

Muhammad Afif பனைத் தோட்டம் கடந்து வந்த கதை பிரதமர் Anwar-ரை நெகிழச்செய்தது

Picture : Awani

JOHOR BAHRU:

 Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim, தம்மை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையால் தனது பாட்டியுடன் எண்ணெய்ப் பனைத் தோட்டம் வழியாக பயணம் செய்த ஒன்பது வயது சிறுவன் Muhammad Afif Ikhwan-இன் கதையைப் பகிர்ந்து, அது தம்மை ஆழமாக நெகிழச்செய்ததாக தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ Facebook பதிவில் அன்வார் கூறுகையில், Felda Palong Timur, Segamat-ல் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது Muhammad Afif சுருக்கமாக சந்தித்த தருணம் தமது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார். அந்தச் சிறுவன் கூட்டத்தைக் கடந்து வந்து தம்முடன் கைகுலுக்கியதோடு, பின்னர் மேடைக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Muhammad Afif-பின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது பாட்டி Rosimah Mohammad, எண்ணெய்ப் பனைத் தோட்டப் பாதையை மோட்டார் சைக்கிளில் கடந்து பேரனை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாக Anwar கூறினார். சிறியதாகத் தோன்றிய அந்த ஆசை, பாட்டியின் அன்பும் தியாகமும் காரணமாக மிகப் பெரிய அர்த்தத்தை பெற்றதாகவும் அவர் பதிவிட்டார்.

நாட்டின் நிர்வாகப் பொறுப்புகளில் busy’யாக இருந்தாலும், Muhammad Afif-பின் உறுதியையும் முயற்சியையும் பாராட்டும் வகையில் அவரை நேரில் சந்தித்து, ஒரு மிதிவண்டியை பரிசாக வழங்க ஏற்பாடு செய்ததாக பிரதமர் தெரிவித்தார். அந்தச் சந்திப்பு சிறுவனின் எதிர்கால வாழ்க்கையில் ஊக்கத்தை ஏற்படுத்தும் நினைவாக அமைய வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Muhammad Afif தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கி, தனது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கு சேவை செய்யும் நல்ல குடிமகனாக வளர வேண்டும் என்று Anwar வாழ்த்தினார். வாழ்க்கையில் சிறிய கனவுகளுக்கும் பெரிய மதிப்பு இருப்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, Kampung Pudu, Segamat-ஐச் சேர்ந்த 58 வயதான Rosimah Mohammad, தனது பேரன் பிரதமரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காக எண்ணெய்ப் பனைத் தோட்டம் வழியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன், பலரும் பாட்டி–பேரன் பாசத்தையும், சிறுவனின் உறுதியையும் பாராட்டினர்.

Scroll to Top