
ஜொகூர் பாரு, 11 ஜூலை : ஜொகூர் பாருவில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளை விரும்புபவர்களுக்கு புதிய இலக்காக லட்சுமி கோல்ட் பேலஸ் தனது புதிய கிளை திறப்பு விழாவை 12 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக நடத்தவுள்ளது.
No. 11, Jalan Titiwangsa 3/2, Taman Tampoi Indah, 81200 Johor Bahru என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய நகை மாளிகை, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் அழகிய சேகரிப்புகளுடன் சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, திறப்பு விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படவுள்ளது. எனவே ஆரம்பத்திலேயே வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையும்.

காலத்தால் அழியாத தங்க நகைகள், ஜொலிக்கும் வைர ஆபரணங்கள் மற்றும் அழகிய வெள்ளி நகைகள் என பல்வேறு வகையான ஆபரணங்களை ஒரே இடத்தில் தேர்வு செய்ய விரும்புபவர்கள் இந்த நிகழ்வை தவறவிடக் கூடாது.
கேள்விப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நேரில் வந்து இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு, ஜோகூர் பாருவின் புதிய தங்க நகை இலக்காக உருவாகும் லட்சுமி கோல்ட் பேலஸுடன் நீங்களும் ஒளிருங்கள்.
நிகழ்ச்சி விவரம்:
📍 புதிய கிளை திறப்பு விழா
📅 12 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை)
🕥 காலை 10:30 மணி
📍 No. 11, Jalan Titiwangsa 3/2, Taman Tampoi Indah, 81200 Johor Bahru



