Tazhal Media – தழல் மீடியா

/ Jul 13, 2026
Latest News
tms

KPT 2035-ஆம் ஆண்டுக்குள் 70% மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்க இலக்கு – Zambry

Picture : Awani

KUALA LUMPUR: Kementerian Pendidikan Tinggi (KPT), 2035ஆம் ஆண்டுக்குள் Universiti Awam (UA) மற்றும் politeknik-களில் பயிலும் முழுநேர இளங்கலை மாணவர்களில் குறைந்தது 70 சதவீத பேருக்கு கல்லூரி விடுதி வசதியை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir தெரிவித்துள்ளார்.

Dewan Rakyat-இல் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இந்த இலக்கு Dasar Kemudahan Kolej Kediaman di Institusi Pendidikan Tinggi Awam (IPTA) கொள்கையின் கீழ் வகுக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான தங்குமிடத்தை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாக B40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்குமிடப் பிரச்சினையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நீண்டகால திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். இதற்காக புதிய விடுதிகள் கட்டப்படுவதோடு, பழைய விடுதிகளும் கட்டம் கட்டமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

Rancangan Malaysia Ke-12 (RMK12) மற்றும் Rolling Plan Pertama, Rancangan Malaysia Ke-13 (RP1, RMK13) காலப்பகுதியில், உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமார் RM1.1 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக Zambry தெரிவித்தார். அதேவேளை, தற்போதுள்ள விடுதிகளைப் பழுதுபார்த்து மேம்படுத்துவதற்காக கூடுதலாக RM225 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், Public Private Partnership (PPP) முறையின் கீழ் 36 விடுதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 15 திட்டங்கள் நிறைவடைந்து, சுமார் 45,000 மாணவர்கள் தங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. RMK13 காலத்தில் மேலும் ஐந்து புதிய விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. அவை நிறைவடைந்ததும் கூடுதலாக 21,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

விடுதி ஒதுக்கீட்டில் B40, Orang Asli, OKU, asnaf மற்றும் மாணவர் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், வளாகத்திற்கு வெளியே தங்கும் மாணவர்களின் சுமையை குறைக்க பல்வேறு உதவித் திட்டங்களும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

Scroll to Top