Tazhal Media – தழல் மீடியா

/ Jul 15, 2026
Latest News
tms

மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக தொடங்கிய லட்சுமி கோல்ட் பேலஸ்… ஜொகூர் பாருவில் உற்சாகமான Soft Launch!

ஜொகூர் பாரு, ஜூலை 12:- மலேசியாவின் நம்பிக்கைக்குரிய நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் லட்சுமி கோல்ட் பேலஸ் (Lakshmi Gold Palace), தனது புதிய ஷோரூமை ஜொகூர் பாருவில் பிரம்மாண்டமான Soft Launch நிகழ்வின் மூலம் கடந்த ஜூலை 12, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தது.

ஜொகூர் பாருவின் No.11, Jalan Titiwangsa 3/2, Taman Tampoi Indah என்ற முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம், தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் பல்வேறு புதிய வடிவமைப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அழகிய மற்றும் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்வுகள் முதல் திருமண விழாக்கள் வரை அனைத்து தருணங்களுக்கும் ஏற்ற நகைத் தொகுப்புகள் இங்கு விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு சலுகை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. முதலில் வருகை தந்த 300 வாடிக்கையாளர்களுக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்பட்டதால், காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் ஷோரூம் முழுவதும் உற்சாகமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த சூழல் நிலவியது.

நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், குடும்பத்தினர், அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய கிளையின் துவக்கத்தை சிறப்பித்தனர். புதிய ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நேர்த்தியான நகை வடிவமைப்புகள் பலரின் பாராட்டையும் பெற்றன.

இந்த வெற்றிகரமான Soft Launch நிகழ்வு, உயர்தரமான நகைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாத சேவையை வழங்க வேண்டும் என்ற லட்சுமி கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் உறுதியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த புதிய ஷோரூம் பொதுமக்களின் வருகைக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வாடிக்கையாளர்களையும் அன்புடன் வரவேற்க தயாராக உள்ளது.

நிகழ்வின் நிறைவில், புதிய கிளை திறப்பு விழாவை வெற்றிகரமாக மாற்றிய அனைத்து வாடிக்கையாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு லட்சுமி கோல்ட் பேலஸ் நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. இந்த ஆதரவே எதிர்காலத்தில் மேலும் சிறந்த சேவையை வழங்கும் உற்சாகத்தை அளிப்பதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top