
Picture : Awani
Sultan Selangor Sultan Sharafuddin Idris Shah அவர்கள், Malaysia-விற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள Singapore ஜனாதிபதி Tharman Shanmugaratnam அவர்களை Istana Alam Shah-இல் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
இந்த சந்திப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Singapore ஜனாதிபதி Tharman Shanmugaratnam, Malaysia-விற்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாக 13 முதல் 15 Julai வரை வருகை மேற்கொண்டுள்ளார்.
Klang-இல் அமைந்துள்ள Istana Alam Shah-க்கு காலை 11 மணியளவில் வருகை தந்த Singapore ஜனாதிபதியை, Raja Muda Selangor Tengku Amir Shah வரவேற்றார். இந்த நிகழ்வில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் Steven Sim அமைச்சரவை பிரதிநிதியாகவும் கலந்துகொண்டார். Sultan Selangor மற்றும் Singapore ஜனாதிபதி இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் Tharman Shanmugaratnam Istana Alam Shah-இலிருந்து புறப்பட்டார்.
இந்த அரசுமுறை பயணம், Yang di-Pertuan Agong Sultan Ibrahim அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெறுகிறது. இது முன்னதாக Sultan Ibrahim அவர்கள் 2024 ஆம் ஆண்டு Singapore-க்கு மேற்கொண்ட அரசுமுறை பயணத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Malaysia மற்றும் Singapore இடையிலான உறவு நீண்டகாலமாக வலுவானதாக இருந்து வருகிறது. குறிப்பாக, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகிய துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பை பேணி வருகின்றன. Singapore, உலகளவில் Malaysia-வின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ASEAN நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் தொடர்ந்து விளங்குகிறது.



