
Picture : Awani
KUALA LUMPUR: Network School, Israel குடிமக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் உடனடியாக மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். மலேசியா Israel-லை அங்கீகரிக்காத நாடு என்பதால், அந்த நாட்டின் குடிமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர், Forest City, Johor-இல் செயல்படும் Network School சமூகத்தில் இரட்டை கடவுச்சீட்டு அல்லது இரட்டை குடியுரிமையை பயன்படுத்தி Israel குடிமக்கள் இணைந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அனைத்து தொடர்புடைய அரச அமைப்புகளும் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
“விசாரணை நடைபெற்று வருகிறது. அத்தகைய நபர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மலேசியா Israel-லை அங்கீகரிக்காததால், Israel குடிமக்கள் நாட்டில் இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்,” என்று Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
இந்த விவகாரம் குறித்து Menteri Pendidikan Tinggi விரிவான விளக்கத்தை வழங்குவார் என்றும் பிரதமர் தெரிவித்தார். அதேவேளை, Kementerian Dalam Negeri (KDN) மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், Network School செயல்பாடு, அதில் உள்ளவர்களின் அடையாளம் மற்றும் குடியுரிமை விவரங்கள் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கு முன்பு Menteri Besar Johor Datuk Onn Hafiz Ghazi, Forest City-யில் இயங்கும் Network School-ல் Israel குடிமக்கள் இரண்டாவது கடவுச்சீட்டை பயன்படுத்தி இணைந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு குறித்து கவலை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, மாநில அரசின் கோரிக்கையின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் தேசிய இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.



