
Picture : Tazhal
KUALA LUMPUR: Botanical Garden KL-இல் அமைந்துள்ள Bamboo House பகுதியில் நடைபெறவுள்ள “பொன்னியின் இசைப் பறவைகள் தேடல் ஆரம்பம் 5.0” என்ற பிரம்மாண்ட இசை நடைப்பயிற்சி நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
வரும் 19 September 2026 (Sabtu) காலை 7.00 மணி முதல் நடைபெறவுள்ள இந்த இசை நடைப்பயிற்சி நிகழ்ச்சி, மலேசிய கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து மக்களுடன் இணைந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்நலன், ஒற்றுமை மற்றும் இசையின் மகத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 15 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் பங்கேற்கலாம். குடும்பத்துடன், நண்பர்களுடன் அல்லது தனிப்பட்ட முறையிலும் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைவுப் பரிசாக Medal வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு, Dr Adrian தலைமையில் சிறப்பு யோகா மற்றும் வார்ம்-அப் பயிற்சி நடைபெறும். இதன் மூலம் பங்கேற்பாளர்கள் பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் நடைப்பயிற்சியை தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக RELA மற்றும் St. John Ambulance குழுவினர் முழு நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிக்காக பணியில் ஈடுபடவுள்ளனர் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் Lucky Draw நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் கட்டணமாக RM45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் Sports Wear உடையுடன் வருமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த இசை நடைப்பயிற்சி நிகழ்ச்சி, உடல்நல விழிப்புணர்வு, இசை, நட்பு மற்றும் சமூக ஒற்றுமையை ஒரே மேடையில் கொண்டாடும் தனித்துவமான நிகழ்வாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் விவரங்கள் மற்றும் பதிவு செய்ய விரும்புவோர் 019-342 4569 அல்லது 017-387 3734 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்.



