Tazhal Media – தழல் மீடியா

/ Aug 06, 2026
Latest News
tms

மேற்படிப்பில் கவனம் செலுத்த விருப்பம்; PKR துணைத் தலைவர் பதவியை விட விரும்பியதற்கான காரணத்தை விளக்கிய Nurul Izzah

Picture : Awani

KUALA LUMPUR: Parti Keadilan Rakyat (PKR) துணைத் தலைவர் Nurul Izzah Anwar, தனது மேற்படிப்பைத் தொடர முழு கவனம் செலுத்துவதற்காகவே துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகும் விருப்பத்தை வெளிப்படுத்தியதாக விளக்கமளித்துள்ளார். இந்த முடிவு நீண்டகால ஆலோசனை மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Nurul Izzah கூறுகையில், அரசியல் பொறுப்பை விட சேவை மற்றும் அர்ப்பணிப்பே தனது வாழ்க்கையின் அடிப்படை நோக்கமாகும். அந்தச் சேவை அரசியல் பதவியிலேயே மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும், புதிய அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்காக மேற்படிப்பைத் தொடர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும், தனது முடிவை புரிந்துகொண்டு மதிப்பளித்த PKR தலைவர் Datuk Seri Anwar Ibrahim மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைமையினருக்கு நன்றியைத் தெரிவித்தார். அதேவேளை, பதவியில் இருந்து விலகும் விருப்பத்தை தெரிவித்தாலும், PKR-யை விட்டு விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், கட்சியின் போராட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்.

மேலும், Datuk Seri Saifuddin Nasution Ismail இடைக்கால துணைத் தலைவராகவும், Datuk Seri Amirudin Shari தேர்தல் இயக்குநராகவும் தங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக Nurul Izzah தெரிவித்தார். அவர்களின் பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, Majlis Pimpinan Pusat (MPP) PKR, Nurul Izzah-வின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், அவர் உடனடியாக பதவியை விட்டு விலகாமல், Kongres Nasional PKR 2026 முடிந்ததும் தற்காலிக விடுப்பில் செல்ல அனுமதி வழங்க முடிவு செய்தது. அந்தக் காலப்பகுதியில் துணைத் தலைவரின் பொறுப்புகளை Saifuddin Nasution தற்காலிகமாக மேற்கொள்வார்.

Scroll to Top