Tazhal Media – தழல் மீடியா

/ Aug 14, 2026
Latest News
tms

செலாங்கூர் சுக்மா 22: செபாங்கில் 18 சாலைகள் நான்கு நாட்களுக்கு மூடப்படும்

Picture : Awani

SEPANG, 14 ஆகஸ்ட் 2026: செலாங்கூர் சுக்மா 22 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் சாலை மிதிவண்டிப் போட்டிக்கு வழிவிடும் வகையில், SEPANG மாவட்டத்தில் 18 இடங்களில் சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு மாற்றுப்பாதைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்தச் சாலை மூடல்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.

SEPANG மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Norhizam Bahaman தெரிவித்ததாவது, போட்டி நடைபெறும் நாட்களில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை சாலை மூடல்கள் அமுலில் இருக்கும். இப்போட்டியில் மொத்தம் 142 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக மொத்தம் 96 இடங்கள் கண்காணிக்கப்படும் என்றும், அவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் Persiaran Pantai Sepang Putra, Jalan Kampung Bagan Lalang, Jalan Bukit Bangkong-Tanjung Rhu மற்றும் Jalan Tumbuk Sempadan ஆகிய சாலைகள் மூடப்படும்.

செவ்வாய்க்கிழமை மேலும் பல முக்கியச் சாலைகள் மூடப்படும். அவற்றில் Jalan Banting-Semenyih, Jalan Jenderam Hilir, Jalan Jenderam-Salak, Bandar Baru Salak Tinggi, Jalan Pekan Salak-Lembah Paya, Jalan Sepang Lama மற்றும் Jalan Sungai Pelek ஆகியவையும் அடங்கும்.

போட்டி நடைபெறும் பாதைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். போட்டியாளர்கள் மற்றும் சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதுடன், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Scroll to Top