Tazhal Media – தழல் மீடியா

/ Aug 26, 2026
Latest News
tms

புதிய தலைமுறை அடையாள அட்டைக்கு மாறுவதால் நாளை முதல் MyKad அச்சிடும் பணியில் தற்காலிக இடையூறு

Picture : Awani

PUTRAJAYA, 25 ஆகஸ்ட் 2026: புதிய தலைமுறை மை கார்டுக்கு மாறும் பணிகள் நடைபெறுவதால், நாடு முழுவதும் மை கார்டு அச்சிடும் பணிகளில் நாளை, புதன்கிழமை முதல் தற்காலிக இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடையூறு ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீடிக்கும் என Jabatan Pendaftaran Negara தெரிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள மை கார்டு கட்டமைப்பில் இருந்து புதிய தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் பணிகளை Jabatan Pendaftaran Negara மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அவசரத் தேவை இல்லாத பொதுமக்கள், மேற்கண்ட காலகட்டத்தில் மை கார்டை மாற்றுதல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முதல் முறையாக மை கார்டுக்கு விண்ணப்பிக்கவுள்ள 12 வயது சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களும் சிறிது காலம் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதிய தலைமுறை மை கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதும், அவர்கள் அதனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை அடையாள அட்டையின் உற்பத்தி தொடங்கும் காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை குறைப்பதற்காக இந்த மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மை கார்டு தொடர்பான சேவைகளில் தற்காலிக இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மை கார்டுக்கு மாறும் நடவடிக்கையின்போது பொதுமக்களின் ஒத்துழைப்பும் பொறுமையும் முக்கியம் என Jabatan Pendaftaran Negara தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றப் பணிகளால் ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு Jabatan Pendaftaran Negara மன்னிப்பு கோரியுள்ளது. புதிய தலைமுறை அடையாள அட்டை அறிமுகம் தொடர்பான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top