Tazhal Media – தழல் மீடியா

/ Sep 20, 2026
Latest News
tms

[தற்போது] “அமைச்சரவை மாற்றம் தொடருமா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்” – பிரதமர் Anwar

Picture : Awani

SHAH ALAM: போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook-இன் பதவி விலகல் தொடர்பான கடிதத்தைத் தாம் இன்னும் பெறவில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

எனினும், பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக Anthony Loke தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக தம்முடன் கலந்துரையாட விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். முதலில் Anthony Loke-ஐ நேரில் சந்தித்து, அவரது விளக்கத்தையும் கருத்தையும் கேட்டறிந்த பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும் என Anwar தெரிவித்தார்.

“நான் இன்னும் எதையும் கலந்துரையாடவில்லை. அவருடைய கருத்தை நான் கேட்க வேண்டும். அவர் கொள்கையில் உறுதியானவர். ஆரம்பம் முதலே ஊழல் நடைமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். எனவே, அவரைச் சந்தித்து அவரது கருத்தைக் கேட்ட பின்னரே என்னால் முடிவு எடுக்க முடியும்,” என அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை SHAH ALAM-இல் உள்ள SITC-யின் Grand Ballroom-இல் நடைபெற்ற Majlis Hi-Tea Reunion Perintis Reformis நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் Anwar இதனைத் தெரிவித்தார். Anthony Loke மேற்கொள்ளவுள்ள SHANGHAI பயணத்துக்குப் பின்னரே இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் அமைச்சரவை மாற்றத்துக்கு வழிவகுக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது, Anwar “Satu-satulah” என சுருக்கமாகப் பதிலளித்தார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak-க்கு நிபந்தனையுடன் எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் முடிவைத் தொடர்ந்து, Anthony Loke போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலக முன்வந்திருந்தார். தனது பதவி விலகல் கடிதத்தை விரைவில் பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Scroll to Top