Tazhal Media – தழல் மீடியா

/ Sep 22, 2026
Latest News
tms

ஜாலான் கோத்தா ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் ஆலய 34ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது

நெகிரி செம்பிலான், ஜாலான் கோத்தாவில் அமைந்துள்ள ‘Dato கோயில்’ என அழைக்கப்படும் ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர், ஸ்ரீ முனீஸ்வரர், ஸ்ரீ மகா சக்தி அம்மன் ஆலயத்தின் 34ஆம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு காலையிலேயே ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக்கடன்களை பக்தியுடன் செலுத்தினர். தொடர்ந்து மதிய வேளையில் பாரம்பரிய சிறப்புமிக்க தீமிதி திருவிழா நடைபெற்றதுடன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுக்கொண்டனர்.

மாலை நேரத்தில் நடைபெற்ற ரத ஊர்வலம் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருள, பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ரத ஊர்வலம் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழா உற்சாகத்தை ஏற்படுத்தியது. பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றுச் சென்றனர்.

Scroll to Top