
பேராசிரியர் காதர் இப்ராஹிம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் யார்? டத்தோஸ்ரீ எம். சரவணன் கேள்வி
கோலாலம்பூர், 26 அக்டோபர் 2026: பேராசிரியர் காதர் இப்ராஹிம் மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் குறித்து டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது சமூக வலைத்தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது சமீபத்திய பதிவில், “தன்னை டத்தோ என்று அழைத்துக்கொள்ளும் இவர் யார்? பேராசிரியர் காதர் இப்ராஹிமை உடல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் இந்த நபர் யார்?” என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ச்சம்பவம் தொடர்பாக காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
மேலும் விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற பின்னரே இச்சம்பவம் குறித்த முழுமையான தகவல்களைத் தெளிவுபடுத்த முடியும்.
- யாழினி வீரா



