Tazhal Media – தழல் மீடியா

/ Sep 28, 2026
Latest News
tms

நஜிப் இல்லத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு தொடர்கிறது – கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்

Picture : Awani

கோலாலம்பூர், செப். 28 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் கோலாலம்பூர், ஜாலான் லங்ஙாக் டூத்தா பகுதியில் உள்ள இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கு தொடர்புடைய தகவல் கிடைத்தவுடன், அந்த இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். தற்போது வரை அந்தப் பாதுகாப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அடுத்தகட்ட உத்தரவுக்காக காவல்துறை காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“தகவல் கிடைத்த ஆரம்பத்திலிருந்தே நாங்கள் பாதுகாப்பை வழங்கி வருகிறோம். அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார். கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரிவு தலைமை அதிகாரி மற்றும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் பொறுப்பேற்பு மற்றும் ஒப்படைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நஜிப்பின் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணியில் செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைமையகம் மற்றும் கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஃபாடில் தெரிவித்தார். இதனிடையே, கோலாலம்பூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவின் புதிய தலைவராக எஸ்ஏசி ஷைதாத்துல் அக்மார் முகமட் நூர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைநகரின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் சிறப்புப் பிரிவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் ஃபாடில் கூறினார்.

Scroll to Top