Tazhal Media – தழல் மீடியா

/ Nov 04, 2026
Latest News
tms

தீபாவளியை முன்னிட்டு 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு RM1.1 பில்லியன் STR நிதியுதவி

கோலாலம்பூர், நவம்பர் 4: வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில், நான்காம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் (Sumbangan Tunai Rahmah – STR) கீழ் RM1.1 பில்லியன் நிதி இன்று முதல் வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இந்த நிதியுதவியைப் பெறவுள்ளனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை இந்த உதவித்தொகை விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த பயனாளிகளும் இந்த உதவித்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றும், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் நலனுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் இன்று நடைபெற்ற தீபாவளி மெகா பஜார் நிகழ்ச்சியைப் பார்வையிட்டபோது அவர் இதனை அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வாழ்க்கைச் செலவுச் சுமையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவளிப்பதுடன், அவர்களின் நலனைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நிதியுதவி வெளிப்படுத்துவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

Scroll to Top