Tazhal Media – தழல் மீடியா

/ Nov 07, 2026
Latest News
tms

சமூக நல்லிணக்கத்தையும் நிலையான வளர்ச்சியையும் நோக்கிப் பயணிப்போம் – டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தீபாவளி வாழ்த்து

கோலாலம்பூர், நவம்பர் 7:ஒளி வீசும் எண்ணங்களுடன் விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து, நமது மாண்பையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் மங்கல விழாவாகத் தீபாவளியைக் கொண்டாடுவோம் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதிய நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் அனைவரும் நிலையான வளர்ச்சியையும் சமூக நல்லிணக்கத்தையும் நோக்கிப் பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீபாவளி என்பது ஒளியின் திருநாள் மட்டுமல்லாமல், நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பல் கலாச்சாரத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான விழாவாகவும் திகழ்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இனிய நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்க வேண்டும் எனத் தனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top