
கோலாலம்பூர், நவம்பர் 7:மலேசியாவின் பல்லின மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலியுறுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெறவுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, “Cahaya Deepavali, Semarak Perpaduan” (தீபாவளி ஒளி, ஒற்றுமையின் எழுச்சி) என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.இந்நிகழ்வை மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார்.
நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை லிட்டில் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸில் இக்கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. தீபாவளியின் ஒளியை நம்பிக்கை, நன்மை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொண்டாடுவதுடன், மலேசியாவின் பல்வேறு இன மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே பரஸ்பர மரியாதையையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
மலேசியாவின் பன்முகத்தன்மையே நாட்டின் பலம் என்பதை எடுத்துரைக்கும் வகையில், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இக்கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.



