
ஜோகூர் பாரு, நவம்பர் 11 – இந்தியத் திரையிசை உலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, முதன்முறையாக ஜோகூர் பாருவில் நேரடி இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார்.
‘Raaja Rhapsody 3.0 – Isaignani Ilaiyaraaja Live in Concert’ என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ஜோகூர் பாருவிலுள்ள EduCity Sports Complex அரங்கில் நடைபெறவுள்ளது.
பல தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இளையராஜாவின் இசைப் படைப்புகளை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலத்தால் அழியாத அவரது மெட்டுகள், புகழ்பெற்ற திரைப்பாடல்கள் மற்றும் இசைக் கோர்வைகளை ஒரே மேடையில் அனுபவிக்க இசை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை விரைவில் Ticket2U இணையத்தளத்தின் வழியாகத் தொடங்கப்படவுள்ளது. தனிப்பட்ட முன்பதிவுகள் தொடர்பாக +60 12-404 0946 என்ற WhatsApp எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
Hello Pink Asia மற்றும் Mercuri நிறுவனங்கள் இணைந்து பெருமையுடன் வழங்கும் இந்நிகழ்ச்சி, ஜோகூர் பாருவில் நடைபெறவுள்ள முக்கியமான இசை நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசைஞானியின் இசை விருந்தை நேரடியாகக் காணவும் கேட்கவும் மலேசிய ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையவுள்ளது.


