Tazhal Media – தழல் மீடியா

/ Nov 11, 2026
Latest News
tms

ஏ.ஆர். ரஹ்மானின் ‘தி வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி – 2027 ஜூன் 12ஆம் தேதி கோலாலம்பூரில் பிரம்மாண்ட ஏற்பாடு

கோலாலம்பூர், நவம்பர் 11 – ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மலேசியாவில் மீண்டும் பிரம்மாண்டமான நேரடி இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார். ‘A.R. Rahman – The Wonderment Tour’ என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, 2027ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி, தமிழ் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 90 விழுக்காடு தமிழ் பாடல்களையும், மீதமுள்ள 10 விழுக்காடு ஏ.ஆர். ரஹ்மானின் பிரபலமான இந்திப் பாடல்களையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

இதன் மூலம் பல தலைமுறைகளைக் கவர்ந்த அவரது புகழ்பெற்ற இசைப் படைப்புகள் முதல் சமகாலத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் வரை ஒரே மேடையில் இடம்பெறவுள்ளன.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், இசைஞானி ஏ.ஆர். ரஹ்மானுடன் முதன்முறையாக இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதனைத் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ நுழைவுச்சீட்டு விற்பனை வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு Ticket2U இணையத்தளத்தில் தொடங்கும்.

நிகழ்ச்சி தொடர்பான மேலதிக அறிவிப்புகள், சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் தகவல்கள் படிப்படியாக வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய ரசிகர்களுக்காகத் தமிழ் இசைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள முக்கியமான இசை நிகழ்வுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top