கோலாலம்பூர், நவம்பர் 12:மலேசியாவின் இயல்பாக்கப்பட்ட மத்தியகள வீரரான எண்ட்ரிக் டோஸ் சாண்டோஸ் (Endrick Dos Santos), காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ள நிலையில், மீண்டும் ஹரிமாவ் மலாயா அணிக்காக விளையாட ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 31 வயதான இவர், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 2026 ஹூண்டாய் ஆசியான் கிண்ணப் போட்டியின்போது முழங்காலின் உள்பக்க தசைநார் (MCL) காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்தார்.
ஸ்டார் சிட்டி (Star City) அணியின் தலைவராகவும் செயல்படும் அவர், மலேசிய தேசிய அணிக்காக ஒவ்வொரு முறையும் அழைக்கப்படுவது தமக்குப் பெருமையான விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சீனாவின் குவாங்டோங் பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு சர்வதேச நட்புறவுப் போட்டிகளில் சீனா மற்றும் யேமன் அணிகளை எதிர்கொள்ளும் மலேசிய அணிக்கு நேர்மறையான முடிவுகளைப் பெற்றுத் தர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
“நான் தற்போது 100 சதவீதம் விளையாடத் தயாராக இருக்கிறேன். காயத்திலிருந்தும் முழுமையாக மீண்டுவிட்டேன்.bஎனது கழக அணிக்காக விளையாடிய கடந்த மூன்று போட்டிகளும் சிறப்பாக அமைந்தன. அதில் இரண்டு வெற்றிகளும் ஒரு குறுகிய புள்ளி வித்தியாசத்திலான தோல்வியும் அடங்கும். கழக அணிக்காகவும், ஹரிமாவ் மலாயா அணிக்காகவும் எப்போதும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.




