Tazhal Media – தழல் மீடியா

/ Nov 18, 2026
Latest News
tms

நெகிரி செம்பிலான் முதலமைச்சர் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் ராஜினாமா!

கோலாலம்பூர், நவம்பர் 17 – நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ இஸ்மாயில் லாசிம் தனது பதவியை இன்று முதல் ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சருக்கான வேட்பாளரை பாரிசான் நேஷனல் (BN) தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி முன்மொழியவுள்ளதாக பிஎன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் லாசிம், நவம்பர் 16ஆம் தேதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தை நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸுக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் நகலை அஹ்மத் ஸாஹிட் பெற்றுள்ளதாக சாம்ப்ரி குறிப்பிட்டார்.மாநில அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க, புதிய முதலமைச்சருக்கான பெயர் மாட்சிமை தங்கிய மன்னரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.புதிய தலைமைத்துவத்தைத் தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவும், மன்னரின் ஒப்புதலும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் விளக்கினார்.

மேலும், தலைமைத்துவ மாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்கு பிஎன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும், இஸ்மாயில் லாசிம் முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சாம்ப்ரி கூறினார்.அண்மையில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பிஎன் 18 இடங்களையும், பெரிக்கத்தான் நேஷனல் 7 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. இதன் மூலம் இரு கூட்டணிகளும் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தன.புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்த இறுதி முடிவு மன்னரின் ஒப்புதலுக்குப் பின்னரே உறுதியாகும்.

Scroll to Top