Tazhal Media – தழல் மீடியா

/ Nov 23, 2026
Latest News
tms

நவம்பர் 28-இல் ஜோகூர் பாருவில் ம.இ.கா தேசியப் பேராளர் மாநாடு! டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் தொடங்கி வைக்கிறார்

ஜோகூர் பாரு, நவம்பர் 22:மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) தனது தேசியப் பேராளர் மாநாட்டை வரும் நவம்பர் 28ஆம் தேதி ஜோகூர் பாருவில் நடத்தவுள்ளது.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மாநாடு காலை 9 மணிக்கு ஆஸ்டின் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார். ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஓன் ஹபீஸ் காசி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.இதற்கிடையில், கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக டத்தோ ஆர்.டி. ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நெகிரி செம்பிலான் மாநில ம.இ.கா தொடர்புக் குழுவின் தலைவராக டத்தோ வி.எஸ். மோகன் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வரும் மோகன், மாநிலக் கட்சிப் பொறுப்பை மீண்டும் ஏற்கவுள்ளார்.

கட்சியின் முக்கியப் பேராளர்கள் ஒன்றுகூடும் இந்த மாநாட்டில், தேசிய அளவிலான கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

Scroll to Top