
சென்னை, நவம்பர் 22:நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஓ.ம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவான இப்படம், கடந்த நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இருப்பினும், அதன் தொடக்க நாள் வசூல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷின் முந்தைய படங்களான ‘கர’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகியவற்றின் முதல் நாள் வசூலை ‘ஓ.ம்’ திரைப்படம் கடந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு தனுஷின் அதிக வசூல் பெற்ற தொடக்கப் படங்களில் ஒன்றாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ‘ஓ.ம்’ திரைப்படத்தின் வசூல் அவரது திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.முதல் நாளிலேயே கிடைத்துள்ள இந்த வரவேற்பு தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் திரையுலகில் உருவாகியுள்ளது.


