Tazhal Media – தழல் மீடியா

/ Nov 25, 2026
Latest News
tms

கோத்தா கினபாலுவில் மூன்று இளம்பெண்கள் மாயம்!

கோத்தா கினபாலு, நவம்பர் 25:சபா மாநிலம் கோத்தா கினபாலு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் காணாமல் போன மூன்று இளம்பெண்களைக் கண்டறிய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கோத்தா கினபாலு மாவட்டக் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காணாமல் போனவர்களில் முதலாவது பெண் 17 வயதுடைய லோர்னா பால்மணி ஆவார். கம்புங் நும்பாக், ஒன் போர்னியோ, மெங்கட்டால் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி முதல் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மெங்கட்டால் தாமான் ரிச்தார் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஒலிவியா ஜெஃப்ரி கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.இதேவேளை, இனானாம் கம்புங் சினுலிஹான் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஃபர்ஹா நபிலா அப்துல்லா கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று சம்பவங்களும் தனித்தனியாக இடம்பெற்றுள்ள நிலையில், காணாமல் போன இளம்பெண்களின் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைப் பற்றிய தகவல்கள் அல்லது அவர்கள் இருக்கும் இடம் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் கோத்தா கினபாலு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 088-529222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்திலும் தகவல்களை வழங்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.காணாமல் போன மூவரையும் விரைவாகக் கண்டறிய பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் ஒத்துழைப்பும் முக்கியமானவை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Scroll to Top